டந்த ஆறு சட்டசபை தேர்தல் மற்றும் 32 வருடம் கழித்து ஒரு ஆளும் கட்சி மீண்டும் பதவிக்கு வருவது இந்த வருட தமிழக சட்டசபை தேர்தலின் வரலாற்றுச் சிறப்பு.
அ.இ.அ.தி.மு.க கூட்டணி தி.மு.க கூட்டணியைவிட அதிகம் பெற்ற வாக்குகள் 1.1 சதவிகிதம் மட்டும். ஆனால் அந்த சிறிய வித்தியாசமே, அ.இ.அ.தி.மு.க 134 தொகுதிகளில் வெற்றி பெற்று, 234 தொகுதிகள் கொண்ட சட்டசபையில் அறுதி பெரும்பான்மை பெற்ற கட்சியாக ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்ள போதுமானதாக இருந்தது.
இதில் வேடிக்கை என்னவென்றால், போட்டியிட்டத் தொகுதிகளை மட்டும் வைத்துப் பார்த்தால் தி.மு.க பெற்ற வாக்குச் சதவிகிதம் 41.05% (176 தொகுதிகளில்), அ.இ.அ.தி.மு.க பெற்ற வாக்குச் சதவிகிதம் 40.78% (232 தொகுதிகளில்).
இதிலிருந்து ஆளும் கட்சிக்கு எதிராக பெரிய அளவில் எதிர்ப்பு அலை எதுவும் இல்லை என்று பொதுவாக தீர்மானிக்க முடியும். ஆனால் தேர்தல் தரவுகளை ஆழமாக ஆராய்ந்து பார்த்தால், இந்த தேர்தல் அத்தகைய எளிய முடிவுகளையும் மீறி சில ஆச்சரியமான விஷயங்களை நமக்கு அளிக்கிறது.
கீழே உள்ள விளக்கப்படங்கள் மூலம், இந்த கட்டுரை உங்களுக்கு அந்த ஆச்சரியங்களைக் காட்சிப்படுத்துகிறது
இந்த சட்டசபைத் தேர்தலில் மொத்தமாக 74.26 சதவிகிதம் வாக்குகள் பதிவாகியுள்ளனது. 75 சதவிகிதத்திற்கும் மேல் வாக்கு பதிவாகியுள்ள 133 தொகுதிகளை மட்டும் எடுத்துக்கொண்டால் அ.தி.மு.க 78 தொகுதிகளிலும் தி.மு.க கூட்டணி 55 தொகுதிகளிலும் வெற்றிபெற்றுள்ளன. 80 சதவிகிதத்திற்கும் மேல் வாக்கு பதிவாகியுள்ள 61 தொகுதிகளை எடுத்துக்கொண்டாலும் அ.தி.மு.க 38 தொகுதிகளிலும் தி.மு.க கூட்டணி 23 தொகுதிகளிலும் வெற்றிபெற்றுள்ளன. இதிலிருந்து அதிக வாக்கு, ஆளுங்கட்சிக்கு எதிரான வாக்கு என்ற கூற்று பொய்யாகியுள்ளது.
போட்டியிட்ட 176 இடங்களில் தி.மு.க 41.1% வாக்குகளையும் அ.தி.மு.க 232 இடங்களில் 40.8% வாக்குகளையும் பெற்றுள்ளது. மொத்த தொகுதிகளான 232 இடங்களை எடுத்துக்கொண்டால் கூட்டணிக் கட்சிகளின் மோசமான செயல்திறனால் தி.மு.க கூட்டணியின் வாக்குகள் 39.7% குறைந்துள்ளது. இது அ.தி.மு.க-வின் வெற்றிக்கு வழிவகுத்தது. மொத்தம் பதிவான வாக்குகளில் ஒவ்வொரு கட்சியும் தனித்து பெற்ற வாக்கு சதவிகிதங்கள்: அ.தி.மு.க 40.8%, தி.மு.க 31.6%, இ.தே.கா 6.4%, பா.ம.க 5.3%, பா.ஜ.க 2.8%, தே.மு.தி.க 2.4%
தமிழக தேர்தலில் மொத்த நோட்டா வாக்குகள் 561244. அதாவது மொத்த வாக்குகளில் 1.3 சதவிகிதம். நோட்டா வாக்குகளுக்கும், வெற்றிவித்தியாசத்திற்கும் எந்தவித இணையுறவு இல்லையென்றாலும், 25 தொகுதிகளில் நோட்டா வாக்குகள் வெற்றி வித்தியாசத்தை விட கூடுதலாக இருந்தது. நோட்டா வாக்கு சதவிகிதமான 1.3%, பல பிரபல கட்சிகளை விட கூடுதலாக இருந்ததுதான் ஆச்சர்யம்! நாம் தமிழர் கட்சி பெற்ற வாக்குச் சதவிகிதம் 1.1%. மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் 0.9%. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 0.8%. விடுதலைச் சிறுத்தைகள் கட்சி 0.8%. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 0.7%. முஸ்லீம் லீக் 0.7%. தமிழ் மாநில காங்கிரஸ் 0.5%. புதிய தமிழகம் 0.5%.
இம்முறை தனித்து போட்டியிட்ட பாட்டாளி மக்கள் கட்சி, 5.3 சதவிகித வாக்குகளைப் பெற்றது. எந்த தொகுதியிலும் பெற்றி பெறாவிட்டாலும், 81 தொகுதிகளில் அது வெற்றி வித்தியாசத்தை விட கூடுதலாக வாக்கு வெற்றது. 4 தொகுதிகளில் இரண்டாவது இடத்தையும், 66 தொகுதிகளில் மூன்றாம் இடத்தையும் பாட்டாளி மக்கள் கட்சி பெற்றது. வட தமிழக மாவட்டங்களில் பா.ம.க.-வின் வலுவான செயல்திறன், தி.மு.க.-வின் வெற்றி வாய்ப்பை அந்த மாவட்டங்களில் பாதித்துள்ளது.
திராவிட கட்சிகளுக்கு மாற்றாக தன்னை முன்னிருத்திக் கொண்ட மூன்றாம் அணி இந்த தேர்தலில் மிக பெரிய தோல்வியைத் தழுவியது. தே.மு.தி.க., ம.தி.மு.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் தமிழ் மாநில காங்கிரஸ் ஆகிய ஆறு கட்சிகளை உள்ளடக்கிய மூன்றாம் அணி ஒரு தொகுதியிலும் வெற்றிபெறாவிட்டாலும், 90 தொகுதிகளில் வெற்றி வித்தியாசத்தை விட கூடுதலான வாக்குகளைப் பெற்றது. கூட்டணியின் முதன்மை கட்சியான தே.மு.தி.க.-வின் வாக்கு சதவிகிதம் 8 புள்ளியிலிருந்து 2.4 ஆக குறைந்தது. முந்தைய சட்டசபையில் 29 தொகுதிகளை வென்ற தே.மு.தி.க. இந்த முறை ஒன்றில் கூட வெற்றி பெற முடியவில்லை. ஆனாலும் மூன்றாம் அணியின் வாக்குகள், குறிப்பாக வட தமிழகத்தில், தி.மு.க.-வையே அதிகம் பாதித்துள்ளது.
இதுவரை நடந்து முடிந்த சட்டசபை தேர்தல்களை ஒப்பிட்டு பார்க்கும்போது இந்த தேர்தல் குறுகிய வாக்கு வித்தியாசங்களை அளித்திருக்கிறது. 16 தொகுதிகளில் வெற்றிவித்தியாசம் ஆயிரத்திற்கும் குறைவாகவே உள்ளது. 4 தொகுதிகளில் மட்டும் 50,000க்கும் மேல் வாக்குவித்தியாசத்தைக் கொண்டுள்ளது. கீழே உள்ள வரைப்படம், பா.ம.க., மூன்றாம் அணி மற்றும் நோட்டாவின் வெற்றி வித்தியாசத்தைத் தொகுத்துக் காட்டுகிறது.
முழு வரைப்படத்தையும் காண கிடைமட்ட உருள்பட்டையை இழுக்கவும்
உள்ளடக்கம் மற்றும் வடிவமைப்பு: வெங்கடேஷ் ராஜமாணிக்கம், குஹு குப்தா, மானஸ் ஷர்மா, ஷைலஜா சம்பத்
நிரலாக்கம்: ஷைலஜா சம்பத், மானஸ் ஷர்மா, குஹு குப்தா
தமிழாக்கம்: ப்ரியா
தரவு மூலம்: இந்திய தேர்தல் ஆணையம்
மென்பொருள்: D3.js, Bootstrap, noUSlider and Data{Meet}
புகைப்படம்: PTI
நிரல் மூலம்: Github Repo
தொடர்புக்கு: Information Design Lab IDC IIT Bombay
வெளியீடு: 3 ஜீன் 2016